
சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானம் நேற்று பகலில் ஏர்போர்ட்டில் தரை இறங்கிய போது திடீரென விமானத்தின் வால் பகுதி தரையில் உரசி தீப்பொறி பறந்தது. உடனே சுதாகரித்துக் கொண்ட விமானி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் விமானத்தை கொண்டு வந்தார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கான காரணம் குறித்து விமான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஏற்கனவே சமீப காலமாக விமான விபத்துக்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.