கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 7 மணிக்கு வள்ளியூருக்கு வந்தது அந்த ரயிலில் மாரியப்பன் என்பவர் தனது 8 வயது மகள் அகிலா ஸ்ரீ மற்றும் குடும்பத்தினருடன் பயணித்தார். இந்நிலையில் வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு வந்து ரயில் நிற்பதற்கு முன்பாக அவசர வழி ஜன்னல் வழியாக அகிலா ஸ்ரீ எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.

இதனால் பிளாட்பாரத்திற்கும் ரயில்வே தண்டவாளத்திற்கும் இடையே விழுந்து அகிலா ஸ்ரீயின் காலில் சிறுகாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அகிலா ஸ்ரீ உயிர் தப்பினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.