
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் தவுலத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமையா பேகம் (22) என்ற மகள் இருக்கிறார். இவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் பெரிய வரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி கல்லூரிக்கு சென்ற சுமையா பேகம் அதன் பின் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையில் சுமையா மற்றும் தங்க தமிழன் இருவரும் சென்னைக்கு ரயிலில் சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் காஷ்மீருக்கு சென்று ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களை தேடுவது காதல் ஜோடிக்கு தெரிய வரவே அவர்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். மேலும் காதல் ஜோடி இருவரும் மேஜர் என்பதால் சுமையாவை அவருடைய காதல் கணவருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.