உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிராயாக்ராஜ் பகுதியில் மகா கும்பமேளா நடைபெறும் நிலையில், இந்த மாதம் 26 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் கூட்ட நெரிசல் என்பது அதிகமாக இருக்கிறது.

அப்போது அந்த கூட்டத்தின் நடுவே உணவு பொருள் விற்கும் ஒரு ஏழை வியாபாரி கூடை முழுவதும் அதனை கொண்டு செல்கிறார். அவரிடமிருந்து பயணிகள் திருடி  சாப்பிடுகிறார்கள். அதோடு அந்த ஏழை வியாபாரியை கேலியும் செய்கிறார்கள். அங்கிருந்தவர்கள் அதனை தடுக்க நினைக்காமல் திருடி சாப்பிடுவதை பார்த்து சிரிக்கிறார்கள். அந்த ரயில் சரியாக பிரயாக்ராஜ் தான் செல்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அங்கிருந்தவர்கள் மகா கும்பம் என்று கூறுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை குவித்து வருகிறார்கள்.