
டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அவர் படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் பயணித்த நிலையில் அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் தாயும் மகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது மேல் படுக்கையில் ராணுவ வீரர் ஒருவர் படுத்து கொண்டிருந்தார். ரயில் குவாலியர் ரயில் நிலையம் அருகே வந்தபோது மேல்படுக்கையில் இருந்து கீழே தண்ணீர் வழிந்தது.
உடனே விழித்துக் கொண்ட அந்தப் பெண் எழுந்து பார்த்தபோது மேல் படுக்கையில் படுத்து இருந்த ராணுவ வீரரை பார்த்த நிலையில் அவருடைய உடை நனைந்திருந்தது. அவர் குடிபோதையில் சிறுநீர் கழித்தது தெரிய வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே தனது கணவருக்கு செல்போனில் அந்த பெண் தெரிவித்த நிலையில் அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்த ரயில்வே போலீசார் சிறுநீர் கழித்த ராணுவ வீரர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் விரைந்தனர். இதனால் அந்த பெண் ஆன்லைனில் பிரதமர் அலுவலகத்திற்கும் ரயில்வே மந்திரிக்கும் புகார் தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ரயில் பயணிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.