இந்தியாவில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் , சிறப்பு இயக்கத்தின் கீழ், 2500 பொது ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, மேலும் 10,000 பொதுப் பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் கோடையில் அதிக போக்குவரத்து மற்றும் அதன் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே 10000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. ரயில்வேயின் சேவைகள், பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.