
இந்திய ரயில்வேயில் சுமார் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குரூப் சி வேலைகள் தொடர்பான காலியிடங்கள் ஆகும். இதற்கான விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டது. ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் குரூப் சி பணியிடங்களில் மொத்தம் 2,48,895 காலி இடங்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ மற்றும் குரூப் பி பிரிவில் மொத்தம் 2,070 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 2,50,965 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.