
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில் ரயில் நடைமேடைகளில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ரயில் நடைமேடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல், புதுடெல்லி, மும்பை CSMT ஹவுரா, பெங்களூரு உள்ளிட்ட 60 ரயில் நிலையங்களில் கன்ஃபார்ம் டிக்கெட்டுகள் வைத்துள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் நிலையத்துக்கு வெளியே காத்திருப்பு பகுதியை அமைத்து உறுதி செய்யப்படாத வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளை வைத்துள்ள பயணிகள் அங்கே தடுத்து நிறுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.