பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பரான் மாவட்டம் உள்ளது. இங்கு முசார்பூர் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லோகோ பைலட் ரயிலை பாதியில் நிறுத்தினார். அதாவது தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்து கிடப்பதை லோகோ பைலட் பார்த்தார். இதனால் அவர் அவசர பிரேக்குகளை போட்டு பாதியில் ரயிலை நிறுத்திய நிலையில் பயணிகள் உடனடியாக கீழே இறங்கி அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்தப் பெண் தண்டவாளத்தில் அசந்து தூங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணை எழுப்பி விசாரித்தனர். அப்போது தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக பெண் கூறியுள்ளார்.

அதாவது தன்னுடைய காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலை செய்து கொள்வதற்காக அவர் தண்டவாளத்திற்கு வந்துள்ளார். அவர் ரயில் வரும் என்று நினைத்து தண்டவாளத்தில் படுத்திருந்த நிலையில் அப்படியே அசந்து தூங்கிவிட்டார். அதோடு தன்னை எதற்காக காப்பாற்றினீர்கள். நான் சாகவேண்டும் என கூறி அந்தப் பெண் கதறி அழுதார். அதோடு தன் குடும்பத்தினரால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.