இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா பயன்படுத்துகின்றனர். அதிலும் சிறுவர்களும் இளம் வயது வாலிபர்களும் மீது உள்ள ஆர்வத்தால் விபரீத விளையாட்டில் ஈடுபடுகின்றனர். லைக்ஸ்களுக்காக ஆபத்தான சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் முடிவு உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. செல்ஃபி, ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு லைக் வாங்குவதில் தான் சில வாலிபர்களின் கவனம் உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிறுவர்கள் சேர்ந்து ட்ரெயின் வரும்போது செல்ஃபி, வீடியோ எடுக்க வேண்டும் என முயற்சி செய்கின்றனர். தண்டவாளத்திற்கு அருகே அவர்கள் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த ரயில் சிறுவன் மீது மோதியது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.