
ரவுடிகளை ஒழிப்பதற்கு சென்னை புதிய காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியுள்ளது. அதன்படி பொதுமக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இரண்டு முறை ரோந்து சுற்றி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய இரண்டு கூடுதல் காவல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பணியில் சுனக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.