நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இந்த போரில் ரஷ்யாவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா நேற்று நடத்திய தாக்குதலில் உக்கிரனில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயம் தாக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயமான இது யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதி என கூறப்பட்ட வளாகத்திற்குள் அமைந்துள்ளது. கருங்கடல் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில் அந்நாடு போர் குற்றம் புரிந்ததாகவும் இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.