
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரான் மாவட்டத்தின் 35-வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு பலூன் திருவிழா நடைபெற்றது. இந்த விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று நிறைவு விழாவின்போது பலூன் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் அந்த பலூனை இயக்கும் ஊழியர் ராட்சச பலுனின் ஒரு பக்க கயிறு பிடித்தவாறு தரையில் நின்று கொண்டிருந்தார். அவரின் பெயர் வாசுதேவ் காத்ரி (40). இந்நிலையில் திடீரென பலூன் பறக்க தொடங்கியதால் கயிறை பிடித்தவாரே கிட்டத்தட்ட 100 அடி உயரத்திற்கு அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
राजस्थान में हॉट एयर बैलून शो…!
80 फीट की ऊंचाई से रस्सी टूटने से गिरा युवक। pic.twitter.com/cT6sJAV5jR— Arpit Sharma (@Arpit_Dbhaskar) April 10, 2025
திடீரென கயிறு அறுந்து விழுந்ததால் அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.