பாமக கட்சியில் தந்தை மகனுக்கு இடையே மோதல் போக்கு என்பது இருப்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. நானே இனி கட்சியின் தலைவராக செயல்படுவேன் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில் நான்தான் கட்சியின் தலைவர் என்று அன்புமணி அறிவித்துள்ளார். அதாவது இளம் தலைமுறையினர் தன்னுடைய தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புவதால் அடுத்து வரும் தேர்தலுக்காக நானே கட்சி பொறுப்பை தலைமை தாங்கி நடத்துவேன் என்று ராமதாஸ் அறிவித்த நிலையில் நேற்று அன்புமணி ராமதாஸ் மருத்துவர் ஐயா விருப்பத்தை நிறைவேற்ற நானே கட்சியை வழிநடத்துவேன் என்று அறிவித்தார்.

இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை சமாதானம் செய்ய கட்சி நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த பாமக கட்சியின் எம்எல்ஏ காடுவெட்டி குரு என்பவரது மருமகன் மனோஜ் சொன்ன கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் ஊடகம் ஒன்று அளித்த பேட்டியில் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு தன்னை கேட்காமல் எப்படி இளைஞரணி தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிக்கலாம் என்று அன்புமணி மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். ராமதாஸ் அய்யா உயிருக்கு அன்புமணியால் ஆபத்து இருக்கிறது அவர் எந்தவித எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்.

இதற்கு காரணம் சொத்து பிரச்சனை. அன்புமணி ஒரு மோசமான அரசியல்வாதி. அவர் பணத்தாசை மற்றும் பதவி ஆசைக்காக யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்வார். பாமக குடும்ப கட்சி கிடையாது என்று கூறிய நிலையில் முகுந்தன் பரசுராமனுக்கு எதற்காக பதவி கொடுக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக கட்சிக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் நிலையில் பேரனுக்கு ராமதாஸ் பதவி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.? என்று கூறினார். மேலும் ராமதாஸ் உயிருக்கு அவர் ஆபத்து இருப்பதாக கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.