பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்பீர் கபூர் மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவி நடிப்பில் தற்போது ராமாயண காவியம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பான ராமாயணம் காவியத்தில் லட்சுமணனாக நடித்த நடிகர் சுனில் ஹைத்ரி தற்போது ராமாயணம் படம் பற்றி தெரிவித்த கருத்து இணையதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, அனிமல் திரைப்படத்தை பார்த்த பிறகு ரன்பீர் கபூரை ராமராக கற்பனை செய்வது மிகவும் கடினமானதாக இருக்கிறது. சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் முகத்தில் கொஞ்சம் கூட சீதையின் சாயல் இல்லை. எனக்கு அவர் எப்படி சீதையாக நடிக்கப் போகிறார் என்பது புரியவில்லை. நான் இதுவரை சாய் பல்லவி நடித்த படங்களை பார்த்ததில்லை. ஆனால் அவருடைய முகத்தில் தேவதைக்குரிய எந்த லட்சணமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவிக்கு ராமர் மற்றும் சீதையாக நடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று சுனில் ஹைத்ரி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.