
சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு சிறுவன் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த சிறுவனை மீட்டார். அந்த வாலிபரின் பெயர் கண்ணன். இந்த வாலிபர் அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிய நிலையில் பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கண்ணனை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து சிறுவனின் உயிரை காப்பாற்றியதற்காக தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.