ரிஷப ராசி அன்பர்களே, 

இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள் என்றே சொல்ல முடியும். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அனுகூலமான சூழல் ஏற்படும். அந்நிய தேசம் செல்ல போட்ட திட்டம் வெற்றி தரும். சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கிவிடும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக காணப்படும். இன்று பெண்களுக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படக்கூடும். ஓய்வாக காணப்படுவீர்கள். பிள்ளைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையக்கூடும். இன்று மாணவர்கள் தெளிவான சிந்தனை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி கிடைக்கும். முயற்சி செய்தால் நன்றாக படிக்கலாம். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்