ரிஷப ராசி அன்பர்களே
இன்று கண்டிப்பாக லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படுவார்கள். அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். நிதானமாக செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். மனப்பதட்டம் வேண்டாம். சிந்தித்து பேசுவது நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
இன்று திட்டம் தீட்டி சில பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். நீங்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீராகும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும் .இன்று வீன் அலைச்சலை தவிர்க்கவும். பணிகளில் கவனமுடன் இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.இன்று பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முன் கோபம் வெளிப்படக்கூடும்.
இன்று அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் கூறிவிடும். கல்வி மீது முழு அக்கறை கொள்ளுங்கள். பெற்றோரிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பெரியவர்களை எதிர்த்து பேச வேண்டாம். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்