ரிஷபம் ராசி அன்பர்களே,

இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்துவிடும். திருப்திகரமான பண வரவு இருக்கும். மனமகிழ்ச்சிக்கு இன்று குறைவிருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். ஏற்றம் மிகுந்த நாள் என்றே சொல்ல முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

புதிதாக வீடு வாங்கும் யோகம் உள்ளது. தாயிடம் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நினைத்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். இன்று பெண்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள். சிரமங்கள் தீர்க்கப்படும். சிந்தித்து எடுக்கும் முடிவுகளில் வெற்றி இருக்கும்.

இன்று மாணவர்கள் பாராட்டுகளை பெறுவீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். முயற்சிகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: இரண்டு ஐந்து, மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்