ரிஷபம் ராசி அன்பர்களே,

இன்று காரியங்கள் கண்டிப்பாக சூடு பிடிக்க துவங்கும். முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். நேற்றைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நண்பர்களால் நல்லது நடக்கும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து இணைவார்கள். திருமணம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். மாற்று கருத்து உடையவர்கள் மனம் மாறுவார்கள். வாகனத்தில் செல்லும்போது பொறுமை தேவை. மன துயரம் நீங்கும். மனக்கலக்கம் ஏற்பட்டு சரியாகும். வீண் பழிகளை சுமக்க வேண்டிய சூழல் இருக்கும். கவனமாக இருங்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நேர்மையாக எதையும் செய்வீர்கள். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை தரும். இன்று பெண்களுக்கு கவுரவ பிரச்சனை வராத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தாரிடம் கவனமாக பேச வேண்டும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நேர்மையாக எதிலும் ஈடுபட வேண்டும். படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்