ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் யஸ்வந்த் (22). இவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சம்பவ நாளில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துள்ளார். இவர் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி ரீல்ஸ் செய்துள்ளார். அதாவது போலியாக துப்பாக்கி சூடு நடத்துவது போன்று அவர்கள் ரீல்ஸ் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக யஸ்வந்த் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வாலிபர் ஒருவர் இதனால் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.