இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை என பல தரப்பினரும் அதிக அளவு ரீல்ஸ் மோகத்தை கொண்டுள்ளனர். இந்த ரில்ஸ் மோகத்தினால் இளைஞர்கள் பலர் விபரீதமான சாகசங்களை செய்கிறார்கள். இதனால் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்கள் கூட அரங்கேறுகிறது.

அந்த வகையில் தற்போது வாலிபர்களுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் அந்தரத்தில் தொங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ புனேவில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வாலிபரின் கையை பிடித்துக் கொண்டு இளம்பெண் அந்தரத்தில்  தொங்குகிறார். இதனை மற்றொரு வாலிபர் வீடியோ பதிவு செய்கிறார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.