மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் மோரேனா மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ரீல்ஸ் மோகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் தன்னுடைய கழுத்தில் கயிற்றை இறுக்கி கட்டிக் கொண்டு நடிக்க சக நண்பர்களும் அதனை படம் எடுத்துள்ளனர்.

விளையாட்டாக செய்த விஷயம் இறுதியில் கயிறு இறுக்கி சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனை நடிப்பு என்று நினைத்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. இதனால் அந்த சிறுவன் நண்பர்கள் முன்னிலையிலேயே துடி துடிக்க மூச்சு திணறி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.