சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது.

சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் அரைசதம் எடுத்த நிலையில், ரகானே 29 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை எடுத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. மேலும் இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.