மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன்.

உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் திரு. மு.க. ஸ்டாலின். அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை என பதிவிட்டுள்ளார்.