அதிமுக கட்சியிலிருந்து டிடிவி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட நிலையில் பின்னர் 2018 ஆம் ஆண்டு அமமுக என்ற கட்சியை தொடங்கி பொதுச் செயலாளரானார். அவர் கட்சி தொடங்கிய போது அதிமுகவின் கொடியை போன்று ஒரு கொடியையும் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார். இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அப்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வழங்கு தொடர்ந்தனர். அவர்கள் கட்சியின் கொடி மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வேண்டுமென்று கேட்டிருந்தனர்.

இந்த வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஆக மாறிய பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இந்த வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் அந்த வழக்கை வாபஸ் பெற விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் தற்போது அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் டிடிவி தினகரன் மீது கொடுத்த வழக்கை எடப்பாடி பழனிச்சாமி பெற்றது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும் நிலையில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.