போக்குவரத்து விதிமுறைகளை மீறி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் தானாகவே அபராதம் விதிக்கும் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உங்களுடைய வாகனத்தின் மாசு சான்றிதழ் காணவில்லை என்றாலும் அல்லது சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

உயர் தொழில்நுட்ப கேமராக்கள் உங்கள் வாகன எண்ணை படமெடுத்து சான்றிதழை சரி பார்க்கும். காலாவதியாகி இருந்தால் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் இனி இதனை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது