திரையுலகில் சாதனையாக, முழுமையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக “லவ் யூ” புகழ் பெற்றுள்ளது. பெங்களூரு அருகேயுள்ள சித்தேஹள்ளியைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், இம்முனைப்பை மேற்கொண்டு, நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், காமிரா ஆப்பரேட்டர்கள் என எந்த மனித மூலதனமும் இல்லாமல், முழுக்கமுழுக்க செயல் நுண்ணறிவு கருவிகள் மூலம் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கிராஃபிக் டிசைனராக நூதனும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். வெறும் ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்கள், வசனங்கள், பின்னணி இசை என அனைத்து அம்சங்களும் செயல் நுண்ணறிவின் உதவியுடன் உருவாக, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் ‘U/A’ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

சுமார் 30 வகையான செயற்கை நுண்ணறிவு கருவிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தொழில்நுட்ப ரீதியில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. செயற் நுண்ணறிவு வளர்ச்சியுடன் எதிர்காலத்தில் இப்படங்களை மிகக் குறைந்த நேரத்திலும், மிகச் சிறந்த தரத்திலும் உருவாக்க முடியும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.