தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு பல்வேறு உதவித் தொகையை வழங்கி வருகிறது. அவரவர் கல்வி தகுதிக்கு ஏற்றார் போல உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 30-ம் தேதியுடன் 5 வருடம் முடிவடைந்தவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

30ஆம் தேதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதிகளை பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவு அடைந்திருந்தால் போதுமானது. அதேபோல எஸ்சி எஸ்டி பிரிவினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது .தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.