
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 25 இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கணக்கில் வராத ஆயிரம் கோடி லஞ்ச பணம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்த நிலையில் இதனை எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்திருந்தார். இந்நிலையில்அதிமுக எம்பி தம்பிதுரை கெஜ்ரிவாலை போல கண்டிப்பாக ஸ்டாலினும் சிறை செல்வார் என்று கூறியுள்ளார். அதாவது டெல்லியில் முதல்வராக இருந்த போது தான் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்றார். இதேபோன்று தற்போது தமிழகத்திலும் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரைப் போன்ற ஸ்டாலினும் பதவியில் இருக்கும் போதே சிறைக்கு செல்வார் என்று தம்பிதுரை கூறியுள்ளார். மேலும் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.