திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முத்தால் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தற்போது அறிவித்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் இதுகுறித்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருமா? அப்படி வருமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளாரே” என கேள்வி எழுப்பியுள்ளார்.