சென்னை உயர்நீதிமன்றம் தற்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர்களின் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 1996-2001 காலகட்டத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் 116 கோடி ரூபாய் முறை கேட்டு நடைபெற்றதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய மேயரும் இப்போதைய முதல்வருமான ஸ்டாலின், பொன்முடி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. பின்னர் 2006 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதனை எதிர்த்து கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தற்போது அவர் வழக்கை திரும்ப பெற்றுவிட்டார். மேலும் இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.