
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மிர்ச்சி செந்தில். இவர் சீரியல்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் செந்தில் ஆன்லைன் மோசடியால் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை தான் இழந்து விட்டதாக தற்போது ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது அவருக்கு தெரிந்த ஒருவர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி அவசரமாக 15 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது டிரைவிங்ல் இருந்ததால் அவர் சொன்ன நம்பருக்கு பணம் அனுப்பி விட்டார் .
பின்னர் வாட்ஸப்பில் வேறொரு நம்பர் இருந்ததால் அவரிடம் போன் செய்து கேட்டபோது தன்னுடைய வாட்ஸ் அப்பை ஹேக் செய்து விட்டதாக கூறினார். இதேபோன்று 500 பேர் இன்று எனக்கு போன் செய்தார்கள். அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். மேலும் இது தொடர்பான மெசேஜ் எதுவும் வந்தால் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கையாக இருக்கும்படி நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
View this post on Instagram