
வடகொரியா நாட்டின் தலைநகரில் உலகின் உயரமான மற்றும் காலியான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் Ryugyoung என்று அழைக்கப்படுகிறது. இது கட்டிடம் ஹோட்டல் நிறுவுவதற்காக கட்டப்பட்ட நிலையில் இதுவரை ஹோட்டல் நிறுவப்படவில்லை. இந்த கட்டிடத்தின் உயரம் 1082 அடி ஆகும். இதில் மொத்தம் 3000 அறைகள் கட்டும் திட்டம் இருந்த நிலையில் பொருளாதார காரணங்களால் அது கைவிடப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டது. இது தற்போது ஹோட்டல் ஆஃப் டூம் என்று அழைக்கப்படும் நிலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஹோட்டல் கட்டாமல் கட்டிடத்தை காலியாக வைத்துள்ளனர்.
இந்த கட்டிடம் தற்போது விளம்பரத்திற்காக மாபெரும் தொலைக்காட்சி திரையாக பயன்படுத்தப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் கடந்த 1987 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு திறக்க திட்டமிட்டிருந்தனர். உரிய நேரத்தில் கட்டிடத்தை திறந்திருந்தால் உலகில் உயரமான ஹோட்டல் என்ற சாதனையை படைத்திருக்கும். ஆனால் அது நடக்காததால் தான் தற்போது உலகின் உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு 1.6 பில்லியன் பவுண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூ.16,000 கோடியாகும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு பொருளாதாரம் சரிவடைந்ததால் ஹோட்டல் கட்டும் பணியை கைவிட்டனர். மேலும் இது தற்போது வடகொரிய அரசாங்கத்திற்கு மாபெரும் பிரச்சார திரையரங்காக பயன்படுத்தப்படுகிறது.