டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை அடையாள ஆவணங்களின்றி மாற்ற அனுமதிக்க கூடாது என கருதி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவர் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒரு அடையாளம் ஆவணங்களும் இன்றி மாற்றினால் அது முறை கேடுகளுக்கு வழிவகுக்கும்.

உரிய அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது ஒரு நிர்வாக நடவடிக்கையே தவிர பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல என்று விளக்கம் கொடுத்தார். மேலும் இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கில் உரிய தீர்ப்பு வழங்கப்படும் என கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஊற்றி வைத்துள்ளனர்.