தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாங்கிய ஒரு சொத்தின் மதிப்பு ரூ.24 கோடி என்றும் அதில் சிக்கல் எழுந்ததால் அவர் நீதி மன்றத்தை நாட இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. அதாவது அந்த இடத்தின் முன்னால் உரிமையாளரின் உறுப்பினர்கள் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி இருப்பதாகவும் இதனால் அந்த சொத்தை வாங்கி நிர்வாகம் ஏலம் விட போவதாகவும் கூறப்பட்டது.

இதனால் தன்னுடைய சொத்திற்கு நிவாரணம் கோரி ஜூனியர் என்டிஆர் நீதிமன்றத்தில் புகார் கொடுக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் எந்த உண்மையும் இல்லை என ஜூனியர் என்டிஆர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சொத்தை 10 வருடங்களுக்கு முன்பாகவே விற்று விட்டதாகவும் அதற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.‌ இதன்மூலம் தேவையில்லாமல் பரவிய வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது