பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தெலுங்கு சினிமாவில் ராம்சரனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவாரா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தற்போது பிரபல Lexus LM 350h என்ற சொகுசு காரினை வாங்கியுள்ளார். இந்த சொகுசு கார்க் கப்பல் போன்று இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பலர் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்த காரினை தற்போது நடிகை ஜான்வி கபூர் வாங்கியுள்ளார். இந்த காரின் விலை கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய் இருக்கும். இந்த காரினை நடிகை ஜான்வி கபூர் வாங்கிய நிலையில் தற்போது அது குறித்தான ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது அந்த காரை பயன்படுத்தும் ஜான்வி கபூருக்கு அதன் கதவை மூட தெரியவில்லை. ஒருவேளை கதவை மூடத் தெரியவில்லையா அல்லது அதில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்பது போல் வீடியோ இருக்கிறது. ஆனால் அந்த கதவில் பிரச்சனை இல்லை என்பதே உண்மை. அதாவது அது ஒரு ஆட்டோமேட்டிக் காராகும். ஒரு ஸ்விச்சை எழுதினால் கதவு தானாக மூடிக்கொள்ளும். ஆனால் இதை மறந்த ஜான்வி கபூர் கைகளால் கதவை மூட முயற்சித்தார். ஆனால் திடீரென கதவு ஸ்டக் ஆகிக் கொண்டது போல் இருந்ததால் அவர் அதிர்ச்சியாகிறார். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கார் வாங்க தெரிஞ்ச உங்களுக்கு அத மூட தெரியலையே என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.