
நாட்டில் தேசிய தேர்வு முகமையானது நெட், நீட், ஜேஇஇ, கியூட் போன்ற பல்வேறு நுழைவு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிலையில் நுழைவு தேர்வுகளை நடத்துவதன் மூலம் அந்த அமைப்புக்கு கிடைத்த வருமானம் குறித்து தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி விவேக் இது தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பதிலளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, தேசிய தேர்வு முகமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை நுழைவு தேர்வுகளுக்கான கட்டணமாக ரூ.3513 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதில் 87.2% தேர்வுகளை நடத்துவதற்காக செலவு செய்யப்படுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு க்யூட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தேசிய தேர்வு முகமையின் வருவாய் அதிகரித்துள்ளது என்று கூறினார்.