ராமநாதபுரம் மாவட்டம் பகவதி மங்கலம் கிராம நிர்வாக அதிகாரி பார்த்திபன் ‌(29). இவரை தன்னுடைய தந்தை இறந்ததால் அந்த நிலத்தின் பெயரை தன் பெயரில் மாற்ற விவசாயி ஒருவர் அணுகியுள்ளார். இவர் குமிழேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவரிடம் பார்த்திபன் 37 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாததால் லஞ்ச ஒழிப்புத்துறை காவலரை அணுகியுள்ளார்.

அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயியிடம் கொடுத்து பார்த்திபனிடம் கொடுக்குமாறு கூறினார். அதன்படி விவசாயி பணம் கொடுக்க சென்றபோது ஒரு தனியார் இ சேவை மையத்தில் அந்த பணத்தை கொடுக்குமாறு பார்த்திபன் கூறியுள்ளார். அதன்படி விவசாயி அந்த கடையின் உரிமையாளர் அகமது ஜப்ரின் அலிக்கு பணம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதைத்தொடர்ந்து பார்த்திபன் தலைமறைவாகிவிட்டதால் அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.