இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பணத்தேவை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் அவற்றை சமாளிக்க பலரும் கடன் வாங்குகின்றனர். இதிலும் வேறு சிலர் பெரிய அளவிலான பண தேவையை சமாளிக்க பேங்குகளில் கடன் வாங்குகின்றனர். இதனால் பல பேங்குகளில் குறைந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்குகின்றனர். அந்த வகையில் IDBI பேங்கில் ரூபாய் 5 லட்சம் வரை கடன் தொகை பெறலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்காக அப்ளை செய்வதும் எளிதான ஒன்றுதான். இந்த பேங்கில் கடன் உதவி பெற எந்த இடத்திற்கும் செல்ல தேவையில்லை. இருக்கும் இடத்திலிருந்தே அப்ளை செய்யலாம். ஒருவருக்கு IDBI பேங்கில் அக்கௌன்ட் இல்லை என்றாலும்,  தனிநபர் கடனை பெறலாம். இதில் நீங்கள் 5 லட்சம் வரை கடன் பெறலாம், அதற்கான வட்டி விகிதமும் குறைவு. இந்த கடனுக்காக உங்கள் CIBIL மதிப்பெண் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த கடனுதவியைப் பெற நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து உங்களுடைய மாதச் சம்பளம் ரூ.15000 மேல் இருக்க வேண்டும். நீங்கள் வேலையில் இருக்கலாம் அல்லது வணிகம் செய்பவராக கூட இருக்கலாம்.  நீங்கள் ஒரு வணிகத்தை நடத்துகிறீர்கள் என்றால் உங்கள் மாத வருமானம் ரூ.25,000 மேல் இருக்க வேண்டும். அதோடு நீங்கள் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இதனை விண்ணப்பிக்க முதலில் செல்போனில் ஐடிபிஐ பேங்கின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் முன் பக்கத்தில் லோன் என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்ந்தெடுத்த பிறகு, தனிநபர் கடன் விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பின் வட்டி விகிதம், கடன் தொகை மற்றும் பிற தேவைகளை பெறுவீர்கள். பிறகு “பர்சனல் லோனை” கிளிக் செய்யவும். அதன்பின் கடனுக்கு விண்ணப்பிக்க “அப்ளை ஆன்லைன்” கிளிக் செய்யவும். அதன் பின் விண்ணப்பம் படிவத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியாக நிரப்பவும். அதை முடித்த பின்பு கேட்கப்படும் சரியான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்த பிறகு, சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால் கடன் உதவி அங்கீகரிக்கப்படும். அதன் பின் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.