இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ 51 ரூபாய், 101 ரூபாய் மற்றும் 151 ரூபாய் ஆகிய கட்டணத்தில் புதிய True Unlimited upgrade திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வரம்பற்ற 5g டேட்டாவை வழங்குவது தான் இந்த மூன்று திட்டங்களின் சிறப்பு. மேலும் அவற்றின் வேலிடிட்டி உங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் திட்டத்தின் வேலிடிட்டியை கொண்டிருக்கும் . ஜியோ செயலி அல்லது இணையதளம் மூலமாகவும் யுபிஐ செயலிகள் மூலமாகவும் இந்த பூஸ்டர் பேக் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்று ஜியோ அறிவித்துள்ளது.