இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக அளவு சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக இனி மக்கள் நேரடியாக மீட்டர் பொருத்தப்பட்ட குழாய் மூலம் (Pipeline gas meters) தடையில்லா எரிவாயு சேவையை பெறலாம். எல்பிஜி யுடன் ஒப்பிடும்போது PNG சுமார் 20% மலிவானது.

பைப் லைன் கேஸ் இணைப்பிற்கான முன்பதிவிற்கு வெறும் 576 கட்டணம் செலுத்தினால் போதும். இந்த கட்டணத்தை வசூலித்த 90 நாட்களுக்குள் உரிய கேஸ் இணைப்பு நிறுவனங்கள் PNG இணைப்புகளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் PNG இணைப்பு வழங்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.