தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், நடிகைகள் தீபிகா படுகோனே, திஷா பதானி, மிருணாள் தாக்கூர், ஷோபனா, அன்னா பென் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கல்கி படம் உலக அளவில் வெளியாகி‌ 7 நாட்களில் ரூ.710 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருவதால் விரைவில் ரூ.1000 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.