
ஜியோ பாரத் என்ற ஸ்மார்ட் போனை வெறும் 999 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகம் செய்து ஜியோ நிறுவனம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் போன்கள் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் சேவையுடன் 4ஜி தொழில்நுட்பத்தில் வரும் இந்த போன் மற்ற நிறுவனங்களை காட்டிலும் 30 சதவீதம் குறைவான மாத கட்டணத்தையே வசூலிக்கிறது. இணையதள வசதியுடன் கூடிய ஜியோ பாரத் போனில் ஜியோ சினிமா மற்றும் யுபிஐ வசதிகள் உள்ளன.