
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். அதன்படி பீஹார் மாநிலம் மண்பூர் சந்திப்பில் உள்ள பிளாட்பாரத்தில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து பல்டி அடித்து வித்தை காட்டும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலானது. பொதுவெளியில் தொந்தரவு ஏற்படுத்தியதாக அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த வீடியோவில் இளநீர் தலைகீழாக பல்டி அடித்து தனது திறமையை வெளிக்காட்டுவதை காண முடிகிறது. இதனை பார்த்து மற்ற பயணிகள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்களுக்காகதங்களின் உயிரை பணயம் வைக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
A young man who gained fame for his reckless stunts at Manpur Junction, was arrested by #RPF for creating nuisance and unauthorized entry.
We hope this will serve as a lesson for others who put their lives at risk for likes and shares in social media. #SafetyFirst pic.twitter.com/qDCj9H9mFK
— RPF INDIA (@RPF_INDIA) July 10, 2023