ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சுப்பராய மற்றும் நாராயணா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு அறையில் 6 மாணவர்கள் தாக்கப்படுவது போன்று இருக்கிறது. அதாவது அந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் குப்புற படுக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் அவர்களை 4 மாணவர்கள் மாறி மாறி குச்சியால் தாக்கினர்.

இந்த மாணவர்கள் இப்படி அடி வாங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோக ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இந்த வீடியோவை பகிர்ந்து ஆளும் கட்சிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ஆளும் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றதாக கூறிய நிலையில் இதனை காவல்துறையினரும் உறுதி செய்துள்ளது. மேலும் ஆளும் கட்சியினரை பற்றி தேவையில்லாமல் குறை சொல்வதற்காக இப்படி பொய் குற்றச்சாட்டுகளை ஒய்எஸ்ஆர் பரப்புவதாகவும் கூறியுள்ளனர்.