
தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மூலமாக ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகப்பு 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் நிலையில் இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 3-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்படும் நிலையில் அதனை வாங்க தவறியவர்கள் ரேஷன் கடைகளில் சென்று வாங்கிக்கொள்ளலாம். அதேபோன்று பொங்கல் பரிசு தொகை பெற ஏதுவாக விடுமுறை தினங்களில் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் அந்த தேதிகளில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதற்கு ஈடு செய்யும் விதமாக ஜனவரி 15, 22 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.