ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசானது டெண்டர் கோரியுள்ளது.

இதனையடுத்து அடுத்த இரண்டு மாதத்திற்கு தேவையான நான்கு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 40,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் கோரியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் நிறுத்தப்படஉள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.