
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் கார்டு போல ரேஷன் அட்டை என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான சலுகைகளும் மலிவு விலையில் உணவு பொருட்களும் வழங்கப்படுகின்றன. இதனால் புதிதாக திருமணமானவர்கள் கூட ரேஷன் கார்டு பெற விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ரேஷன் அட்டையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தால் அல்லது திருமணம் ஆகி சென்றால் அவருடைய பெயரை நீக்குவது கட்டாயமாகும். இதை ஆன்லைனில் நாமே எளிதில் செய்து விடலாம். அதற்கு முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அங்குள்ள குடும்ப உறுப்பினர் நீக்க என்ற பகுதியை அழுத்த வேண்டும். அதன் பிறகு திறக்கும் பக்கத்தில் ரேஷனில் இணைக்கப்பட்ட மொபைல் எண், கேப்சா மற்றும் ஓடிபி உள்ளிட்டு நுழைந்து விண்ணப்பிக்கலாம்.