
இந்தியாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்கள் முதல் கேஸ் சிலிண்டர் வரை அனைத்தும் ரேஷன் கார்டு அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பயனளிக்கும் அரசின் ஐந்து திட்டங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள bbl வகை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஐந்து சிறப்பு திட்டங்களை அளிக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா: பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த திட்ட மூலம் ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா: புதிய வீடு கட்டும் பிபிஎல் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா: இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கப்படும். ரீபில் செய்தால் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
விஸ்வகர்மா யோஜனா: கைவினைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு மூன்று லட்சம் கடன் உதவியுடன் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
அந்த்யோதயா அன்னை யோஜனா: பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை இலவசமாக பெறலாம்.